முக்கிய செய்திகள்

காந்தி பிறந்த நாளில் லடாக்கில் பறந்த உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி

Ladak 2021 10 03

Source: provided

லே : மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, முழுக்க முழுக்க கதர் துணியால் நெய்யப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய அளவிலான தேசியக் கொடி லடாக்கில் பறக்கவிடப்பட்டது.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்திய ராணுவத்தின் பொறியாளர்களால் கதர் துணியால் நெய்யப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி, லடாக்கின் லே பகுதியில் பறக்கவிடப்பட்டது. 225 மீட்டர் நீளமும், 150 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கொடி தான், உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி ஆகும். இந்தக் கொடியின் மொத்த எடை 1000 கிலோ.

லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர் இந்த தேசியக் கொடியை திறந்து வைத்தார்.இந்திய ராணுவத் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நராவனே முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்று மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர்.

வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஏராளமான ராணுவ ஹெலிகாப்டர்கள் அந்தப் பகுதியை சுற்றி பறந்து வந்தன. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து