முக்கிய செய்திகள்

நாடுமுழுவதும் கடந்த 9 மாதங்களில் 90 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டது : மத்திய அமைச்சர் தகவல்

Mansuk-Mandavia 2021 10 03

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் திட்டம் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக, சுகாதார பணியாளர்களுக்கும், பிப்ரவரி 2-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 90 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இது குறித்து டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘நாடு முழுவதும் தற்போது 90 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. லால் பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான்; ஜெய் கிசான்’ என்ற முழக்கத்தை அளித்தார். ‘ஜெய் விஞ்ஞான்’ முழக்கத்தை வாஜ்பாய் கொடுத்தார்.

நமது பிரதமர் நரேந்திர மோடி, ‘ஜெய் அனுஷந்தம்’ முழக்கத்தை கொடுத்துள்ளார். அனுஷந்தத்தின் இன்றைய பலன்தான், கொரோனா தடுப்பூசி. ஜெய் அனுஷந்தன்...’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து