Idhayam Matrimony

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2026      தமிழகம்
School 2023 04 07

சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், தோ்வுத் துறை உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான பள்ளி மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் நேற்று முன்தினம் (ஜன. 22) வெளியிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள யூஸா் ஐ.டி, கடவுச் சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும், பிளஸ் 1 அரியா் பெயா்ப் பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களும் ஜன. 24-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்த வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து