முக்கிய செய்திகள்

சமுத்திரகனி நடிக்கும் விநோதய சித்தம்

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      சினிமா
Samuthirakani 2021 10 12

Source: provided

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் படம் ‘விநோதய சித்தம்’. இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சஞ்சிதா ஷெட்டி, முனிஸ்காந்த்,  ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவை கவனிக்க ரமேஷ் படத்தொகுப்பைச் செய்துள்ளார்.  படம் பற்றி சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையானவை. எவராலும் அவற்றை கட்டுப்படுத்த முடியாது.

இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு என்றார். தம்பி ராமையா பேசுகையில், படம் பார்ப்பவர்கள் ஒரு தத்துவ நாவலை படித்து முடிப்பது போல் உணருவார்கள்  என்றார்.  அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இந்த விநோதய சித்தம்’ படம் அக்டோபர் 13  அன்று ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து