முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் நடிகர் ரஜினிகாந்த் : கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் பொன்னாள் இது என்று தெரிவித்துள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் நடிகர் ரஜினிகாந்த் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான இந்த விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதினை வழங்கினார்.

விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு, பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியத் திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்தியத் திரைப்பட உலகின் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதொரு பொன்னாள் ஆகும். இந்தியத் திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடூழி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்'' என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து