எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொரோனா பாதிப்பில் இருந்து 15,951 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 42 லட்சத்து 2 ஆயிரத்து 202 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,664, தமிழ்நாட்டில் 1,112, மகாராஷ்டிராவில் புதிதாக 889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.
கொரோனா பாதிப்பால் மேலும் 356 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கை உள்பட 281 மரணங்கள் அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 4,55,068 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,028 பேர் அடங்குவர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,951 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது. தற்போது 1,63,816 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 241 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 64,75,733 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102 கோடியே 94 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நாடு முழுவதும் 11,31,826 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 60 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


