முக்கிய செய்திகள்

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

Puducherry 2021 08 02

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, அகவிலைப்படி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டு, ஏற்கனவே 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகவிலைப்படி உயர்வை ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்றும் மாதத்திற்கு 3.2 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து