முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 48 காசுகள்

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

உலகிலேயே குறைந்த விலையாக வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு விற்கப்படுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ. 200-க்கு விற்கப்படுகிறது . நெதர்லாந்தில் ரூ . 172 ஆகவும் , நார்வேவில் ரூ .170 ஆகவும் , டென்மார்க்கில் ரூ .162 ஆகவும் விற்பனையாகிறது.

ஆசிய அளவில் பார்த்தால் , இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் ரூ . 93 ஆகவும் , சீனாவில் ரூ . 84 ஆகவும் , வங்கதேசத்தில் ரூ . 77 ஆகவும் , இந்தோனேஷியாவில் ரூ . 60 ஆகவும் , இலங்கையில் ரூ . 68 ஆகவும் , பாகிஸ்தானில் ரூ . 59 ஆகவும் , மலேசியாவில் ரூ . 37 ஆகவும் உள்ளது.

அதே வேளையில் உலகிலேயே மிக குறைவாக 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ  1.48 க்கு வெனிசுலா நாட்டில் விற்கப்படுகிறது . ஈரானில் 5 ரூபாய்க்கும் சிரியாவில் 17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது . மேலும் 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் கீழே உள்ளது.

விமானத்தில் பயணித்தவர் நடுவானில்  திடீர் உயிரிழப்பு 

இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்ட நபர் விமானத்தில் பயணித்த போது நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து பிஹசூஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த 25-ம் தேதி ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகருக்கு புறப்பட்டது. ஹம்பர்க் புறப்பட்ட அந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அந்த விமானத்தில் 51 வயதுடைய நபர் பயணம் செய்துள்ளார். விமானம் ஹம்பர்க் விமான நிலையம் வந்தடைந்த போது அந்த 51 வயது முதியவர் தனது இருக்கையில் உறங்கியவாறு இருந்துள்ளார். அவரை விமான ஊழியர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த நபர் கண் விழிக்கவில்லை. 

இதனால், சந்தேகமடைந்த விமான ஊழியர்கள் விமானத்தில் பணியில் இருந்த மருத்துவ ஊழியருக்கு தெரிவித்தனர். பரிசோதனையில் அந்த பயணி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உயிரிழந்த அந்த 51 வயது பயணியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதியானது. கொரோனாவால் அந்த பயணி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிலி நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

சிலி நாடு தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் லாஸ் அண்டீஸ் நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் அண்டீஸ் நகரில் இருந்து மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.  இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று சிலி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து வெளியேறியது அமெரிக்க மைக்ரோ சாப்ட் நிறுவனம்

கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பன்னாட்டு நிறுவனமான யாகூ சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது. சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த யாகூ நிறுவனம் சீனாவில் தற்போது நிலவும் சட்ட ரீதியிலான நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தது. 

அதன்படி யாகூ நிறுவனம் தனது சேவையை சீனாவில் உள்ள பயனாளர்களுக்கு நிறுத்தி விட்டது.  கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தனது லிங்க்ட் இன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது நிறுவனமாக யாகூ சீனாவில் இருந்து வெளியேறி உள்ளது.

 தீபாவளிக்கு பொது விடுமுறை: மசோதா தாக்கல் செய்தார் அமெரிக்க எம்.பி.

தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.

அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் எம்.பி.களாகவும் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, தீபாவளியின் மகத்தான மத, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து