முக்கிய செய்திகள்

மழை வெள்ளத்தில் உற்சாகமாக பாட்டுப்பாடி படகு ஓட்டிய நடிகர் மன்சூர் அலிகான்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      சினிமா
Mansour-Alikon 2021 11 27

Source: provided

சென்னை :  மழை வெள்ளத்தில்  பாட்டுப்பாடி படகு ஓட்டி மகிழ்ந்த நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாக சென்னை சாலைகளும், தாழ்வான பகுதிகளிலும், மற்றும் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் பாத் டப்பில் கப்பல் ஓட்டும் மன்சூர் அலிகானின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பொறந்தா தமிழ்நாட்டுல பொறக்கனும். சென்னை தண்ணியில மிதக்குனும்.. தமிழனாக பிறக்கனும் சென்னையில் கார் ஓட்டி மகிழனும் எனப் பாட்டுப்பாடும்  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து