எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : புதிதாக உருவெடுத்திருக்கும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பற்றி பிரதமர் மோடி நேற்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது விமான சேவைக்கு தடைவிதிப்பது உள்ளிட்ட பலவிஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3.45 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 4.67 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 121 கோடியே 6 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்டதை தேசிய தொற்று நோய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. உருமாறிய புதிய வகை வைரஸ் ‘ஒமைக்ரான்’ என்று அழைக்கப்படுகிறது. உலக சுகாதாரஅமைப்பு இந்த புதிய வகையான ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு என்று கூறி உள்ளது. மேலும் வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் 10 மடங்கு விரீயம் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போட்ஸ்வானா, ஆங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளது. மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அரசின் முக்கிய அதிகாரிகளுடன் நேற்று காலை 11 மணிக்கு அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய வீரியமிக்க கொரோனா இந்தியாவுக்குள் பரவாமல் தடுப்பது பற்றி இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மாநில அரசுகள் வைத்த கோரிக்கைகள், மருத்துவர்கள், நிபுணர்கள் புதிய வைரஸ் குறித்து தெரிவித்த ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். விமான சேவைக்கு தடை செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விமான பயணத்துக்கு முன்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், இந்தியாவுக்கு வந்த பின் பரிசோதனையை தீவிரப்படுத்துதல் குறித்தும் பேசப்பட்டது.
ஆங்காங், இஸ்ரேலில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2-வது டோஸ் செலுத்துவதில் பல்வேறு மாநிலங்களில் மந்தநிலை காணப்படுகிறது. இதை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் அறிவுறுத்தினார். இதற்கிடையே புதிய வகை கொரோனா பரவி உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களையும், இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
விவசாயிகள் தற்கொலை: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
03 Jul 2025புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, “விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது” என