முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஒமைக்ரான்' வைரஸ் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

உலக்கை அச்சுறுத்தி வரும் 'ஒமைக்ரான்' வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியதை அடுத்து  ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்ப்படாமல் இருக்கு என்ன செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.

இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் எவ்வாறு இருக்கும், வேகமாகப் பரவுமா, உயிரிழப்பை அதிகம் ஏற்படுத்துமா என்பது குறித்து இதுவரை எந்த இறுதியான தகவலும் இல்லை. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

''உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். ஏனென்றால் டெல்டா வைரஸால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டுவிட்டார்கள் என்று செரோ சர்வே மூலம் தெரியவந்துள்ளது. 2-வதாகத் தடுப்பூசி செலுத்தும் வீதமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒமைக்ரான் பாதிப்பின் வீரியம் இந்தியாவில் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இன்னும் வரவில்லை.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவிவிட்டது. ஆனால், தொற்றின் அளவும், பரவல் வீதமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் டெல்டா வகை வைரஸ் மற்றும் முதல் அலையில் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். ஆதலால், ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் இருந்தாலும் அதன் வீரியம் குறைவாகவே இருக்கும்.

கொரோனா வைரஸ் திரிபுகளை எதிர்த்துப் போரிடத் தடுப்பூசி முக்கிய ஆயுதம். ஒமைக்ரான் வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்படாமல் தடுக்கும் கேடயமாகத் தடுப்பூசி இருக்கும் என்பதால், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். முதல் கட்ட ஆய்வில் பரவல் வேகம் ஒமைக்ரானில் அதிகம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறதா அல்லது அதிலிருந்து தப்பிக்கிறதா என்பது தெரியவில்லை''. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து