முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சையான நடுவரின் முடிவு: விராட் கோலி கடும் கோபம்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

மும்பை டெஸ்டில் விராட் கோலியின் விக்கெட் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 27-வது ஓவரின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதன்பிறகு யாரும் எதிர்பாராதது நடந்தது. சுழற்பந்து வீச்சை நன்கு விளையாடி வந்த ஷூப்மன் கில்லை 44 ரன்களில் வெளியேற்றினார் அஜாஸ் படேல். தனது அடுத்த ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் புஜாராவை டக் அவுட் செய்தார் அஜாஸ் படேல். இதன்பிறகு களமிறங்கினார் விராட் கோலி.

அந்த ஓவரின் கடைசிப் பந்தில் கோலியை எல்பிடபிள்யூ செய்தார் அஜாஸ் படேல். டக் அவுட் ஆன கோலி நடுவரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் முறையீடு செய்தார். பந்து முதலில் பேட்டில் பட்டதா அல்லது கால் காப்பில் (pad) பட்டதா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் நடுவரின் முடிவை மாற்ற முடியாது என 3-ம் நடுவர் அறிவித்தார். இதில் அதிர்ச்சியடைந்த கோலி, கள நடுவரிடம் விளக்கம் கேட்டார். பிறகு கோபத்துடன் ஓய்வறைக்குச் சென்றார்.  கோலிக்குக் கள நடுவர் அவுட் கொடுத்ததாலும் அந்த முடிவை மாற்றும் அளவுக்குப் போதிய ஆதாரங்கள் காணொளியில் இல்லாததாலும் 3-வது நடுவர் வேறு வழியின்றி கோலியை அவுட் என அறிவித்தார். 

டோனியின் சாதனையை  முறியடித்த விராட் கோலி

இந்தியாவில் அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி. இந்தியாவில் விராட் கோலி தலைமையேற்கும் 31-வது டெஸ்ட் இது. இதன்மூலம் புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்தியாவில் 30 டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய தோனியின் சாதனையைத் தற்போது தாண்டிச் சென்றுள்ளார். இந்தியாவில் இதுவரை தலைமையேற்ற 30 டெஸ்டுகளில் 23-ல் கோலிக்கு வெற்றி கிடைத்துள்ளது. 

 

இந்தியாவில் அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்தவர்கள் 31* - விராட் கோலி, 30 - தோனி, 29 - கவாஸ்கர், 27 - மன்சூர் அலி கான் பட்டோடி, 21 - செளரவ் கங்குலி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து