முக்கிய செய்திகள்

ரஷ்ய அதிபர் புடினுடன் நாளை ஜோபைடன் கலந்துரையாடல்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      உலகம்
Putin-Joe-Biden 2021 12 05

Source: provided

வாஷிங்டன் : நாளை 7-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சியில் கலந்துரையாட உள்ளார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின், விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதையடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைப் பகுதியில் ரஷ்யா நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், நாளை 7-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சியில் கலந்துரையாட உள்ளார். அப்போது, உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்காமல் தடுக்க, புடினுடன் நீண்ட விவாதம் ஒன்றை நடத்த உள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து