முக்கிய செய்திகள்

இந்த வாரம் வெளியாகிறது ஜெயில் படம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      சினிமா
Jail-movie 2021 12 05

Source: provided

ஜெயில் படத்தின் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணநிதி நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை. க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதனை ஒட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ், இயக்குனர் வசந்த பாலன், தயாரிப்பாளர் ஸ்ரீதரண் மாரிதாசன் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஜிவி பிரகாஷ் “ஜெயில் படத்துல வசந்த பாலன் ரொம்ப முக்கியமான அரசியல் மெசேஜ் ஒன்னு சொல்லிருக்காரு. இன்றைய காலகட்டத்தில் உலகளவிலும், இந்திய அளவிலும் இது மிகவும் அழுத்தமான மெசேஜா இருக்கும். 3 வருஷ உழைப்பு இது. இத்தனை நாள் காத்திருப்புக்கு இப்படம் நிச்சயம் மதிப்புள்ளதாக இருக்கும். இடம் மாற்றுதல் எத்தனை குடும்பங்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை கொடுத்திருக்கிறது என்பதை இப்படம் அழுத்தமாக பதிவு பண்ணிருக்கோம். இது ஒரு பொன்னான படமாக மாறும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து