முக்கிய செய்திகள்

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      இந்தியா
Pipin-Rawat 2021 12 08

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 40 ஆண்டுகளாக தேசத்திற்கு தன்னலமற்று இராணுவ சேவையாற்றியவர் பிபின் ராவத் என்றும், அவரது மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.   

பிரதமர் மோடி: 

பிபின் ராவத்தின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. பிபின் ராவத் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இந்தியா ஒருபோதும் மறக்காது.  

ராஜ்நாத்சிங்:

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மறைவு நாட்டுக்கும், ராணுவத்திற்கும் பேரிழப்பு. 

அமித்ஷா:

பிபின் ராவத்தின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்த துயரமான இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். தாய் நாட்டிற்கு சேவையாற்றிய துணிச்சல் மிக்க வீரர்களில் ஒருவர் பிபின் ராவத்.   

ராகுல்:

இது முன் எப்போதுமில்லாத துன்பியல் சம்பவம், இந்த நேரத்தில் பிபின் ராவத் குடும்பத்துடன் உடன் நிற்கிறோம்.  

கமலஹாசன்:

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து