முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த நிர்வாகம் வழங்குவதில் கோவா முன்னிலை வகிக்கிறது : பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பனாஜி : தனிப்பட்ட ஒருவரின் வருமான அடிப்படையில் சிறந்த நிர்வாகம் வழங்குவதில் கோவா மாநிலம் முன்னிலை வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 

போர்ச்சுகீசியர் வசம் இருந்த கோவா விடுதலை பெற்றதன் 60 வது ஆண்டு விடுதலை நாள்  கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கோவா  தலைநகர் பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் அவர் அஞ்சலி செலுத்தினார்.  விடுதலை நாள் கொண்டாட்டத்தையொட்டி கோவா துறைமுகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாய்மர படகுகள் அணி வகுப்பை பிரதமர் பார்வையிட்டார்.  தொடர்ந்து அகுவாடா கோட்டை சிறைச்சாலையில் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம், கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு, புதிய கோவா மாவட்ட மருத்துவமனை,  மொபா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையம் உள்பட பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  பின்னர் ஷியாம் பிரசாத் முகர்ஜி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு விருது வழங்கி பிரதமர் கௌரவித்தார். 

அதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 

 இந்தியாவின் பெரும்பகுதியை முகலாயர்கள் ஆட்சி செய்த போது, கோவா, போர்ச்சுக்கல் ஆட்சியின் கீழ் வந்தது. பல நூற்றாண்டுகள் கடந்தாலும், இந்தியா மீதான பற்றை கோவா மறக்கவில்லை. இந்தியாவும் கோவாவை மறக்கவில்லை.  சில மாதங்களுக்கு முன்பு இத்தாலி சென்றிருந்த போது வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்தேன். அப்போது, அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அதற்கு அவர், எனக்கு நீங்கள் கொடுத்த மிகப்பெரிய பரிசு என பதிலளித்தார். இது, இந்தியாவின் ஒற்றுமை, துடிப்பான ஜனநாயகம் மீது அவர் கொண்ட அன்பை காட்டுகிறது. 

ஒருவரின் தனிப்பட்ட வருமானம் அடிப்படையில், சிறந்த நிர்வாகம் அளிப்பதில் கோவா முன்னிலை வகிக்கிறது. கோவா மக்கள் கடினமான, நேர்மையான, திறமையான உழைப்பாளிகள் என்பதை மனோகர் பாரிக்கர் மூலம் நாட்டு மக்கள் பார்த்தனர். அவர் தனது வாழ்க்கை மூலம் மாநிலத்திற்காக அர்ப்பணித்து கொண்டதையும், இறுதி மூச்சுவரை மக்களுக்காக உழைத்ததையும் நாம் பார்த்தோம். இவ்வாறு மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து