முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயிற்றுக்கு வெளியே வளரும் உடல் உறுப்புகள்: பிரிட்டன் குழந்தைக்கு அபூர்வ உடல் குறைபாடு

ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : கேஸ்ட்ரோசைஸிஸ் என்னும் பிறவி குறைபாடு என்பது, ஒரு குழந்தை தாயின் கருவில் வளரும் போது குழந்தையின் முன்புற உடல் சுவர் ஒன்றாக இணைக்கத் தவறிவிடும் நிலை. இதனால் வயிற்று தோல் முழுமையாக வளராமல் சிறிய துவாரம் இருக்கும். உடலின் அந்த பகுதி சரியாக மூடப்படாததால் தொப்புளுக்கு வலதுபக்கமாக, உறுப்புகள் வளர வளர உடலில் இருந்து வெளியேற ஆரம்பிக்கும்.குழந்தையின் வயிற்றுப் பகுதியில் இந்த பாதிப்பு ஏற்படும்.

இந்த அரிய வகை பாதிப்புக்குள்ளான குழந்தை பிறந்த உடனேயே இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு உணவு ஏதும் கொடுக்கப்படவில்லை. பிறந்த முதல் 3 வாரங்கள் மருத்துவமனையிலேயே வைத்து கண்கானிக்கப்பட்டது.

குழந்தையின் உடலுக்கு வெளியே வந்துள்ள உறுப்புகள் அதிக வெப்பம் ஆகாமலும் காய்ந்து போகாமலும் இருக்க குழந்தையை மருத்துவர்கள் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர். தற்போது இந்த குழந்தை பிறந்து 5 வாரங்கள் ஆகின்றன.

இந்த அபூர்வ குழந்தைக்கு கோயா எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹவாய் மொழியில் கோயா என்றால் போராளி என்று அர்த்தம்.

பிரிட்டனின் கிரேட் மான்செஸ்டர் பகுதியில் வசித்து வரும் 29 வயதான ஆஸ்லி பவ்லர்-கார்ல் தம்பதியினருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது.ஆஸ்லி கருவுற்று 12 வாரங்களுக்கு பின் மருத்துவர்களால் சொல்லப்பட்ட இந்த செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்ததாக அவர்கள் கூறினர். தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து