முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்ப்பு தெரிவித்து விட்டு தற்போது பிரதமருக்கு வரவேற்பு அளிப்பது சந்தர்ப்பவாத அரசியல்: தி.மு.க. மீது சீமான் சாடல்

வியாழக்கிழமை, 30 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த நம்மாழ்வார் 8-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, 

கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் கருப்பு கொடி மற்றும் சமூக வலைதளத்தில் Go back Modi என்ற எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது அவருக்கு வரவேற்பு அளிப்பது தி.மு.க.வின் சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது. மோடியை பாசிஸ்ட் எனக் கூறிய மு.க ஸ்டாலின் தற்போது அவரை வைத்து 11 மருத்துவக் கல்லூரிகளில் திறக்கும்போது பா.ஜ.க.வின் பி டீம் யார் என்பது தெரிய வருகிறது.

நாகரிக அரசியலை எங்களுக்கு தி.மு.க. சொல்லிகொடுக்க வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. சார்பாக மாநிலங்களில் நடைபெறுவதை கண்காணிக்க கூடிய நபர்கள்தான் கவர்னர்கள். எனவே நீட் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மாட்டார். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என அண்ணாவும், கலைஞரும் கூறி இருந்தனர். ஆனால் கவர்னர் தேவை என்பது போல ஸ்டாலினின் செயல்பாடு உள்ளது. மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே போல் தமிழகத்திலும் கவர்னருக்கான அதிகாரத்தை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!