முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டாக்கு ஜட்ரா விழா: நேபாளத்தில் அணிகலன்களை அணிந்து இளைஞர்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

நேபாளம் நாட்டில் நடைபெற்ற காட்டூன் கதாபாத்திர ஆடை அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான இளைஞர்கள் திரண்டனர். 

நேபாளத்தில் ஒட்டாக்கு ஜட்ரா என்று அழைக்கப்படும் வருடாந்திர விழா 2016-ம் ஆண்டு முதல் பிரபலமடைந்து வருகிறது. இந்த விழாவில் இளைஞர்கள் பிரபலமாக உள்ள காட்டூன் கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து கலந்து கொள்வது வழக்கம். ஆண்டுதோறும் புத்தாண்டு முதல் வாரத்தில் நடைபெறக்கூடிய விழாவில் இந்த வருடமும் ஏராளமான இளைஞர்கள் காட்டூன் கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து மேடையில்தோன்றினர். சிலர் கதாபாத்திரங்கள் போன்று நடித்தும் பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றில் பிரபலமாக உள்ள கதாபாத்திரங்களை போன்றே இளைஞர்கள் ஆடை, அணிகலன்களை அணிந்து விழாவில் பங்கேற்றனர். நேபாளத்தில் இளைஞர்களிடையே பிரபலமாகி வரக்கூடிய இந்த ஒருநாள் விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேபாளத்தில் திரண்டிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து