முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் பரவினாலும் ஊரடங்கு கிடையாது: நியூசிலாந்து அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஒமைக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா  செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

இந்தக் காலகட்டத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொற்று, முன்பை விட வித்தியாசமானது. ஒமைக்ரான் அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. இது கடினமாக இருக்கப் போகிறது. ஆனால், இந்த முறை ஒமைக்ரான் காரணமாக கொரோனா பரவல் ஏற்பட்டாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க உள்ளோம். கடைகள் திறப்பு, உள்ளூர் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் 93 சதவீதத்திற்கு மேலான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 52 சதவீதத்திற்கும்  அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து