முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உள்ளிட்ட 57 இடங்களில் அதிரடி சோதனை

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.அன்பழகன். இவர் தருமபுரி மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளராகவும், பாலக்கோடு தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் இவர் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 13(2), 13(1) சட்டப்பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகள் கே.பி.அன்பழகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் 62 வயதாகும் கே.பி.அன்பழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மனைவி மல்லிகா 2-வது குற்றவாளியாகவும், 2-வது மகன் சசிமோகன் 3-வது குற்றவாளியாகவும், மூத்த மகன் சந்திரமோகன் 4-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். சந்திரமோகன் மனைவி வைஷ்ணவி 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

கெரகோட அள்ளியில் உள்ள கே.பி.அன்பழகனின் வீடு, அருகிலுள்ள பூலாப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் வித்யா ரவிசங்கர் வீடு, பெரியாம்பட்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் இயங்கும் அமைச்சருக்குச் சொந்தமான கிரஷர் குவாரி, கெரகோட அள்ளியைச் சேர்ந்த, அமைச்சரின் உறவினர் கே.டி.கோவிந்தன், முன்னாள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சந்திரசேகர், தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மற்றும் அவரது சகோதரர் வீடு ஆகிய இடங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று (20-ம் தேதி) காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

தருமபுரி அடுத்த அன்னசாகரத்தில் உள்ள தருமபுரி நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவியின் வீடு, கே.பி.அன்பழகனின் உதவியாளரான தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் வசிக்கும் பொன்னுவேல் வீடு, பென்னாகாரம் அடுத்த தாளப்பள்ளத்தில் உள்ள தருமபுரி ஆவின் ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்திலும் உள்ள, முன்னாள் அமைச்சருக்கு தொடர்புடைய சில இடங்கள் உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். 

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த சோதனை சம்பவம் தருமபுரி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.,

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையிலேயே உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து