முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸுக்கு வாக்களித்து உங்கள் உரிமையை வீணடிக்க வேண்டாம் : உ.பி. மக்களுக்கு மாயாவதி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ :  காங்கிரஸுக்கு வாக்களித்து மக்கள் தங்களின் வாக்குரிமையை வீணடிக்க வேண்டாம் என உத்தரப் பிரதேச மக்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தன்னை முதல்வர் வேட்பாளர் என அடையாளம் காட்டிய சில மணி நேரத்திலேயே பிரியங்கா காந்தி அதனை மறுத்துப் பேசுகிறார்.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்களின் உரிமையை வீணாக்க வேண்டாம். மாறாக ஒருமனதாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாங்களிக்கலாம். உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும். அதை காங்கிரஸால் செய்ய முடியாது. காங்கிரஸ் வாக்குகளை சிதறடிக்கும் கட்சியாகவே உள்ளது" என்றார்.

முன்னதாக நேற்று, பிரியங்கா காந்தி அளித்தப் பேட்டி ஒன்றில் மாயாவதியின் மவுனம் ஆச்சர்யமளிப்பதாகக் கூறியிருந்தார். உத்தரப் பிரதேசத் தேர்தலில் இதுவரை மாயாவதி அமைதியாகவே உள்ளார். இது ஆச்சர்யமளிக்கிறது என அவர் கூறியிருந்த நிலையில், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி தனது பாணி அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார் மாயாவதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து