Idhayam Matrimony

புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      உலகம்
Dalai-Lama-2023-12-14

Source: provided

தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்

இந்தியாவின் அண்டை நாடு தீபெத். இந்நாடு 1959ம் ஆண்டு முதல் சீனாவின் கடுப்பாட்டில் உள்ளது. அந்நாட்டை சேர்ந்த புத்த மத தலைவர் தலாய் லாமா சிறுவயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தார். அவருடன் புத்த மதத்தை சேர்ந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இவர்கள் இமாச்சலபிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனிடையே, புத்தமத தலைவரான தலாய் லாமா இன்று தனது 90வது பிறந்த இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி இமாச்சலபிரதேசத்தின் மேக்லியாட் கஞ்ச் பகுதியில் உள்ள புத்தமத வழிபாட்டு தலத்தில் நேற்று தலாய் லாமா நீண்ட நாட்கள் வாழ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா, எதிர்காலத்தில் இவையெல்லாம் நடக்கக்கூடும் எனக்கூறும் பல வாசகங்களை பார்க்கும்போது நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். என்னால் முடிந்த நல்லதை நான் செய்துள்ளேன். இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளுக்குமேல் வாழ ஆசைப்படுகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன. நமது நாட்டை நாம் இழந்தபோதும், நாம் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறோம். தர்மசாலாவில் வாழும் மக்களுக்கு நான் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்' என்றார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து