Idhayam Matrimony

ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      சினிமா
Srikanth -Krishna

சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து இருந்தார். அதேபோல, இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டநிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் வருகிற 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து