முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழகம் முழுவதும் கோவில்கள் மீண்டும் திறப்பு

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 6-ம் தேதி முதல் வருகிற 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று வார நாட்களில் 3 நாட்களில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதனால், பல இடங்களில் கோயில்கள் திறந்திருக்கும் என்று வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நின்று, இறைவனை தரிசனம் செய்து திரும்பிய காட்சிகளை பார்க்க முடிந்தது. அது மட்டுமல்லாமல் கோயில்களுக்கு வெளியே கற்பூரம் ஏற்றியும், மாலைகளை அணிவித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

இந்த நிலையில் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று காலை மீண்டும் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து