முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்மிண்டன் போட்டியில் வெற்றி: சிந்துவுக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

லக்னோவில் நடை பெற்ற சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கும் மற்றும் சிறப்பான விளையாட்டு திறனை வெளிப்படுத்தி இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ். ஆர்.எம். பல்கலைக்கழக மாணவி மாளவிகா பன்சோட்வுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புவனேஷ்-க்கு மாற்று வேண்டும் - கவாஸ்கர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3க்கு பூஜ்ஜியம் என்ற நிலையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதில் புவனேஷ் குமாரின் மோசமான ஆட்டம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சுனில் கவாஸ்கர். இது தொடர்பாக அவர், "அணியின் மூத்த பவுலரான புவனேஷின் விளையாட்டு அதிருப்தி அளிக்கிறது. அவர் இந்த ஒட்டுமொத்த சீரிஸிலும் ஒரே ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதிக ரன்களையும் அள்ளிக் கொடுத்துள்ளார். 

மூன்றாவது போட்டியில் புவனேஷுக்குப் பதிலாக தீபக் சஹார் இறக்கப்பட்டது சரியே. என்னைக் கேட்டால் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்தே புவனேஷை விலக்கி வைக்கலாம். மற்ற போட்டிகளில் அவரது பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்தால் அணிக்கு அவர் பங்களிப்பை பெற வாய்ப்புள்ளது. அதனால், ஒருநாள் போட்டிகளில் இனிமேல் புவனேஷுக்குப் பதிலாக தீபக் சஹாரை நிரந்தரமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய பூப்பந்தாட்ட போட்டி: தமிழக மகளிர் அணி சாம்பியன்

40-வது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. 18 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் தமிழ்நாடு மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. தமிழக அணி அரை இறுதியில் 35-24 மற்றும் 35-26 என்ற கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது. 

தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தமிழக மகளிர் அணி 35-28, 28-35, 35-28 என்ற கணக்கில் ஆந்திராவை விழ்த்தியது.தமிழக அணியில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சமீதாவும் இடம் பெற்றிருந்தார். இந்த அணிக்கு பயிற்சியாளராக ஐ.சார்லஸ் ராஜ்குமாரும், மேலாளராக ரமேஷும் பணியாற்றினர்.

ஆஸ்திரேலிய ஓபன்:  ஹாலெப் தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 4-வது சுற்று ஒன்றில் 27-வது வரிசையில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோலின்ஸ் 4-6, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 19-வது இடத்தில் இருக்கும் மெர்டன்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

14-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹாலெப் (ருமேனியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அலிசிகோர்னெட் (பிரான்ஸ்) 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் கோலின்சை எதிர்கொள்கிறார்.

இணையத்தில் வைரலாகும் கோலி மகளின் 'வீடியோ'

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினரின் குழந்தையான வாமிகாவின் புகைப்படம் தற்போது முதன் முதலாக வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் அரைசதம் அடித்த கோலி, தனது குழந்தைக்கு அர்ப்பணிக்கும் வகையில் தாலாட்டு சைகை செய்தார்.  

அப்போது பெவிலியனில் இருந்த அனுஷ்கா சர்மா தனது மகள் வாமிகாவுடன் இணைந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார். அப்போது தான் வாமிகாவின் முகத்தை ரசிகர்கள் முதன்முதலில் பார்த்தனர். நேரலையின் போது, ஒளிபரப்பான அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து