முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். கொரோனா பரவலை அடுத்து இந்த முறை இணைய வழியே கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களில் 1,930 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் மொத்தம், 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தரவரிசைப் பட்டியலை https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களின் மூலம் அறியலாம்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக நீட் தோ்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.

கலந்தாய்வு தேதிகள்:

ஜனவரி 27-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா் பிரிவுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது. 28, 29-ஆம் தேதிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதன் பின்னா், 30-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது.

இணைய வழியில் கலந்தாய்வு:

இந்தக் கலந்தாய்வில் அதிக அளவில் மாணவா்கள் பங்கேற்பார்கள் என்பதால், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இணைய வழியே இம்முறை கலந்தாய்வு நடைபெறுகிறது. அது தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அதில் உள்ள இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து