முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம்: ஹர்பஜன்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அஸ்வின் பவுலிங் குறித்து முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நான்கு வருடங்களுக்குப் பின் சமீபத்தில் டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் விக்கெட் சாய்க்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஸ்வினுக்கு பதில் மாற்று வீரரை சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் பேசுகையில், "டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி போன்றவற்றில் இஷாந்த் ஷர்மா மற்றும் அஸ்வின் இரண்டு பேரும் இந்திய அணிக்காக சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்கள். அஸ்வின் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு அஸ்வினுக்கு பதிலாக ஒரு மாற்று வீரரைத் தேட வேண்டிய நேரமிது என்று தோன்றுகிறது. அவர் இடத்துக்கு குல்தீப் யாதவ் போன்ற ஒருவர் சிறந்த தேர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

______________

பொவேல் அதிரடி சதம்: மே.இ.தீவுகள் வெற்றி

வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி பிரிட்ஜ் டவுனில் இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய ரோவ்மேன் பொவேல் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 53 பந்தில் 107 ரன்னும் (4 பவுண்டரி, 10 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் 43 பந்தில் 70 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 20 ரன்னில் வெற்றி பெற்றது. டாம் பாண்டன் 39 பந்தில் 73 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), பில்சால்ட் 24 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். செப்பர்டு 3 விக்கெட்டும், பொல்லார்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

______________

விராட் கோலி விவகாரத்தில் பி.சி.சி.ஐ. மீது குற்றச்சாட்டு

கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.,

விராட் கோலி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் கையாண்ட விதம் சரியில்லை. ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கியதில் கிரிக்கெட் வாரியம் தவறு செய்து விட்டது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நீண்டகாலம் பணியாற்றிய கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவெடுத்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ அவர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடாமல் இருப்பது சாத்தியமில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து அறிவேன். இவ்வாறு ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

___________

டெஸ்ட் அணியை வழி நடத்த 5 வீரர்கள் உள்ளனர் - பிரட் லீ

முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, தற்போதைய  இந்திய டெஸ்ட் அணியை வழி   வழிநடத்தக்கூடிய நான்கு-ஐந்து வீரர்கள் உள்ளனர் என்று கூறி உள்ளனர். இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிரட் லீ இந்த கருத்தை கூறியுள்ளார். கடந்த ஆண்டு கோலி இருபது ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பின்னர் தேர்வாளர்கள் இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரே கேப்டனை மட்டுமே விரும்பியதால் அவர் ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து பிரட் லீ கூறியவதாவது., இது முழுக்க முழுக்க விராட் கோலியின் முடிவு. நான் பிக் பாஷ் லீக் மற்றும் ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். இது பற்றி நான் அதிகம் கூற முடியாது, அது முழுக்க முழுக்க விராட் கோலியை பொறுத்தது. நான்கு-ஐந்து வீரர்கள் டெஸ்டில் இந்தியாவை வழிநடத்த முடியும் என்று நான் நினைக்கிறேன், காலம் தான் பதில் சொல்லும்,” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து