முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் மோகா தொகுதியில் பிரபல நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா தோல்வி

வியாழக்கிழமை, 10 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

பிரபல நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா, மோகா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலைப் பெற்று வந்தது. தற்போது 91 இடங்கள் பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பிரபலமான நபர்களையெல்லாம் வீழ்த்தியுள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன் பிரபல நடிகர் சோனு சூட்டின் தங்கை மாளவிகா சூட் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் மோகா தொகுதியில் களம் இறங்கினார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் டாக்டர் அமந்தீப் கவுர் ஆரோரா, பா.ஜனதா சார்பில் டாக்டர் ஹர்ஜோத் கமல், சிரோமன்மணி அகாலி தளம் கட்சி சார்பில் பர்ஜிந்தர் சிங் மஹான் பிரர் ஆகியோர் களம் இறங்கியிருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மாளவியா சூட் பின்தங்கியே வந்தார். 16 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மாளவியா சூட் 38,125 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆம் ஆத்மி வேட்பாளர் அமந்தீப் கவுர் ஆரோரா 58,813 வாக்குகள் பெற்று சுமார் 20,700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து