முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளாப் விமர்சனம்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விளையாட்டில் சாதிக்க நினைப்பவருக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றை கடந்து வெற்றி பெறுவது எப்படி என்பதன் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் கிளாப். கதை, ஓர் ஓட்டப்பந்தய வீரனாக சாதிக்க துடிக்கும் ஆதிக்கு விபத்து ஒன்றில் அவரது வலது கால் அகற்றப் பட்டு விடுகிறது. அதே நேரம் மாநில அளவிலான அத்லெட்டில் முதலாவதாக வந்த கிரிஷா குரூப் என்ற பெண் ஒரு குக் கிராமத்தில் அனாதையாக முடங்கிப் போயிருக்கும் நிலை உருவிகிறது. திறமை இருந்தும் விளையாட்டில் அவர் நிராகரிக்கப்படுவதை கண்டு போராடி, தன்னால் முடியாததை அந்த பெண்ணைக் கொண்டு சாதிப்பதே இப்படத்தின் கதை. மிருகம் படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி ஆன ஆதி பின், ஈரம், மரகத நாணயம் என பல படங்களைத் தொடர்ந்து இப்போது கிளாப் என்ற படத்தைக் கொடுத்துள்ளார். ஒரு கால் இல்லாமல் படும் அவஸ்தையை ரசிகர்களுக்குக் கடத்துவதில் அருமையாக நடித்துக் காட்டியுள்ளார். அழகு மங்கையாக வலம் வரும் ஹீரோயின் அகான்ஷா க்ளைமாக்ஸ் காட்சியில் அசர வைத்து விடுகிறார். கிருஷா குரூப் தடகள நாயகியாக நடித்து அசத்தியுளார். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை அபாரம். மொத்தத்தில் இந்த கிளாப் படத்தைக் கொடுத்த இயக்குனருக்கும் குழுவுக்கும் கொடுக்க வேண்டியது கிளாப் ஒன்றே. இந்த கிளாப் படம்  சோனி லைவ்வில் தற்போது வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து