முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      தமிழகம்
Teacher 2022 04 18

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

இருப்பினும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இணையதளத்தில் சில இடர்பாடுகள் இருந்ததாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடையும் நிலையில், ஏப்ரல் 26ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து