முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தற்போதைய அமைச்சர்கள் செயல்படுத்துவதில்லை: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 12 மே 2022      அரசியல்
sellur-raju-2022-05-12

அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தற்போதைய அமைச்சர்கள் செயல்படுத்துவதில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

மதுரை பி.பி.சாவடி பகுதியில் உள்ள மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மேற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் நேற்று முன் தினம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் வேதனையளிக்கிறது.பத்திரிக்கையாளர்களேயே தாக்கும் அளவிற்கு தொண்டர்களுக்கு  சுதந்திரம் கிடைத்தது என்றால் வேதனை அளிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் கூட்டத்தில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 

மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர்களுக்கு முறையான அறைகள் மற்றும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யவில்லை பலமுறை நான் மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் மாநகராட்சியில் மேயரின் கணவர் தலையிடுவது கண்டிக்கதக்கது மாறாது ஐயா மாறாது மனமும் குனமும் மாறாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தி.மு.கவின் குணம் மக்களுடைய நிலையை அறியாதவர்தான் நிதி அமைச்சர். நீட் தேர்வு குறித்து எங்க அப்பாக்கு சூட்சமம் தெரியும் என்று சொன்னார் உதயநிதி.  மதுரை மக்களுக்கு பொழுது போக்குவதற்காக  சிறந்த இடம் இல்லை என்று நான் சட்டமன்றத்தில் கேட்டேன். அ.தி.மு.க வில் எப்போதுமே அராஜக போக்கு கிடையாது பணையூர் கால்வாய் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நீர் நிறைந்த  தெப்பக்குளத்தில்  லேசர் ஷோ வேண்டும் என்று சொன்ன போது தங்கம் தென்னரசு குறுக்கிட்டு  பேசியதை   நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அனைத்துமே குளறுபடியாக உள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி திட்டம்  மதுரைக்கு அ.தி.மு.க காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தற்போது இருக்கக்கூடிய மதுரை அமைச்சர்கள் செயல்படுத்தவில்லை என்றால் மதுரையில் இருக்கின்ற அ.தி.மு.க உடைய 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நிச்சயம் என்ற திட்டத்தை மதுரை மக்களுக்கு விரைந்து கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது மாவட்ட அவைத்தலைவர் ஆர்.அண்ணாத்துரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், மற்றும் கவுன்சிலர்கள் சோலைராஜா, ரூபிணிகுமார், ஜெ.மாணிக்கம், மாயத்தேவன், பைக்காரா கருப்பசாமி, எஸ்.எம்.டி.ரவி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தா தேவி, நாகஜோதி சித்தன், முத்துமாரி ஜெயக்குமார்  ஆகியோர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!