முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசின் நிர்வாக நடவடிக்கையால் உணவுத்துறையில் ரூ. 2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
Chakrabani 2022 03 22

Source: provided

சென்னை : தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மாபெரும் சாதனையாக சுமார் 2630 கோடி ரூபாய் நிர்வாக நடவடிக்கைகளால் சேமிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் :-

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் மாபெரும் சாதனையாக சுமார் 2630 கோடி ரூபாய் நிர்வாக நடவடிக்கைகளால் சேமிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதலில், பொது விநியோகத் திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்தி, பல்வேறு நிர்வாக கோளாறுகளை சரி செய்ததன் மூலமாக அரசு இந்த சாதனையை படைத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் கடைக்கோடியில் வாழும் மக்களுக்கும் உணவு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அரசு, தகுதிவாய்ந்த ஒவ்வொருவரும் அரசின் சேவைகளை எளிமையாக அணுகிட ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

குறிப்பாக, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவர்கள் நியமிக்கும் நபர்கள் மூலமாக ரேசன் பொருட்களை பெறும் வசதி,   மணமுறிவு ஏற்பட்டு வாழும் பெண்கள், விவாகரத்து சான்றிதழ் இல்லாமலும் புதிய ரேசன் கார்டு பெறும் வசதி,  உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்குதல்,  1000 நபர்களுக்கு மேல் உள்ள ரேசன் கடைகளைப் பிரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும்  உரிய சரிபார்ப்புக்கு பின்னர், முன்னுரிமை இல்லாதவர்கள் என்று தவறாக இருந்த குடும்ப அட்டைகளை முன்னுரிமை உள்ளவர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலனை செய்து துரிதமாக தீர்வு காணும் நடைமுறை,   உறுதியான நிர்வாக கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் இணைப்பு தொடர்பான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முதலீடுகள் என்பதுபோன்ற மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக, கடைக்கோடி தமிழரும் பயன்பெற்று, ஆரோக்கியமான தமிழகத்தை படைத்திட அரசு உறுதி கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து