எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதால், 15-வது சீசன் ஐ.பி.எல் இறுதிப் போட்டியின் நேரத்தை பி.சி.சி.ஐ மாற்றி அறிவித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில்...
கடந்த 2 வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா காரணமாக, இந்தியாவில் முழுமையாக ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாமல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வந்தது. தற்போது தடுப்பூசி காரணமாக கொரோனா சூழ்நிலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதையடுத்து, இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டது.
4 மைதானங்கள்...
எனினும் பயோ பபுள் காரணமாக மகராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் ஐ.பி.எல் போட்டிகள் ரசிகர்கள் அனுமதியுடன் நடைபெறும் என பி.சி.சி.ஐ அறிவித்தது. மேலும் புதிதாக இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டதால், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு 70 சூப்பர் லீக் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.
2 போட்டிகள் மட்டும்...
அதன்படி, கடந்த மார்த் மாதம் 26-ம் தேதி துவங்கிய 15-வது சீசன் ஐ.பி.எல் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 67 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளநிலையில், இன்னும் 2 போட்டிகளே எஞ்சியுள்ளன. ஐ.பி.எல் போட்டியின் சாம்பியன் ஜாம்பவன்களான சென்னை, மும்பையுடன் கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறிய நிலையில், அறிமுக அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டன.
4-வது இடத்தை...
மீதமுள்ள இரண்டு இடங்களில், 3-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை பொறுத்து ராஜஸ்தான் அணி, 3 அல்லது 4-வது இடத்தை பிடிக்கும். 4-வது இடத்தில் 16 புள்ளிகளுடன் பெங்களூரு அணி இருந்தாலும் ரன்ரேட் குறைந்து காணப்படுவதால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை அணிக்கு எதிராக நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பெங்களூரு அணி பிளே ஆஃப் தகுதி சுற்றிலிருந்து வெளியேறிவிடும். மாறாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியுற்றால், பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.
நேரம் மாற்றம்...
இதனைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் 29-ம் தேதி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டி துவங்கும் நேரத்தை பி.சி.சி.ஐ மாற்றியுள்ளது.
அரை மணி நேரம்...
அதாவது வழக்கமாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை, 8 மணிக்கு பி.சி.சி.ஐ மாற்றியுள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக சுமார் 6.30 மணியளவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இசையமைப்பாள ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையிலும், இந்திய கிரிக்கெட் பயணத்தை குறிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.
சுமார் 45 நிமிடங்கள்...
சுமார் 45 நிமிடங்கள் நடக்கும் இந்த கலை நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்தப்பின்னர், 7.30 மணிக்கும் டாஸ் போடப்பட உள்ளது. அதன்பிறகு அரை மணிநேரத்திற்குப் பிறகு 8 மணிக்கு இறுதிப் போட்டி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
08 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளோம்
-
சி.எஸ்.கே. 3-வது இடத்துக்கு சரிந்தது: ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பில் ஆர்.சி.பி. அணிக்கு முதலிடம்
08 Jul 2025மும்பை : ஆர்.சி.பி. அணியின் பிராண்ட் மதிப்பு 227 மில்லியனாக இருந்து 269 மில்லியனாக அதிகரித்துள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
உணவு கெட்டுப்போனதாக கூறி ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ.
09 Jul 2025மும்பை : மகாராஷ்டிரத்தில் உணவு கெட்டுப்போனதாகக் கூறி உணவக ஊழியரை, சிவசேனை எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை
09 Jul 2025ராஜஸ்தான் : ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.