முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடை ஏதும் அணியாமல் உக்ரைன் பெண் போராட்டம்

சனிக்கிழமை, 21 மே 2022      உலகம்
Ukrainian-woman 2022-05-21

Source: provided

பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற திரைப்பட விழாவில், எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள் என ஒற்றை பெண்ணாக அவர் கோஷம் எழுப்பியது உலக அரங்கை அதிரவைத்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்து செல்வதற்கு முன்பு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அங்கிருந்த புகைப்பட கலைஞர்களுக்கு அவர் மேலாடை இன்றி போஸ் கொடுத்தார்.

>அந்த நேரத்தில், ஜார்ஜ் மில்லர் இயக்கிய ஆயிரம் ஆண்டுகளாக காத்திருக்கிறேன் என்ற படத்தை பார்க்க நடிகர்கள் டில்டா ஸ்விண்டன், இட்ரிஸ் எல்பா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் வந்து கொண்டிருந்தனர்.

ஆனால், உக்ரைன் பெண் நடத்திய போராட்டம் காரணமாக சிவப்பு கம்பள வரவேற்பில் விருந்தினர்களின் அணிவகுப்பு சற்று நேரம் தடைபட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!