Idhayam Matrimony

2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் திருவாரூர் ரயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். 

இதற்காக 9-ம் தேதி காலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுக்கிறார். மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லும் முதல்வர்  மு.க. ஸ்டாலின் அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கு நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் முதல்வர்  மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.

9-ம் தேதி இரவு திருவாரூரில் தங்கும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் 10-ம் தேதி காலை திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து