முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதகை -200 துவக்க விழா: ரூ. 56.36 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் : பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

சனிக்கிழமை, 21 மே 2022      தமிழகம்
CM-1 2022-05-21

Source: provided

உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உதகை – 200 விழாவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து  ரூ.56.36 கோடி செலவில் 28 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.34.30 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 9,500 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர்  வழங்கினார்.  

உதகை – 200” துவக்க விழா

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகை நகரம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆனதையொட்டி தமிழக முதல்வர், உதகை 200 என்ற உதகையின் சிறப்புகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.  மேலும், உதகை நகரை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த  ஜான் சல்லிவன் அவர்களை சிறப்பிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ. ராசா மற்றும் தருமலிங்கம் வேணுகோபால் ஆகியோரால் தொகுக்கப்பட்ட “OOTY 200 - 200 Years of Otty” என்ற விழா மலரை முதல்வர் வெளியிட்டார்.

அதை தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ. 56.36 கோடி செலவில் முடிவுற்ற 28 பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.  மேலும்  மொத்தம் ரூ.34.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள  20 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.  அதை தொடர்ந்து  9,500 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். முன்னதாக, உதகை – 200 துவக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு முதல்வர் வருகை தந்த போது, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து