முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேக் டைவர்ஷன் விமர்சனம்

சனிக்கிழமை, 21 மே 2022      சினிமா
Tag-Diversion-Review 2022-0

Source: provided

சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரிக்க சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய்,  ராம்ஸ் ஆகியோர் நடித்துள்ள படம் டேக் டைவர்ஷன். படத்தின் கதையை எழுதி இயக்கியிருப்பவர் சிவானி செந்தில். இசை ஜோஸ் பிராங்க்ளின். கதை, நாயகனின் திருமணத்திற்காக பெண் தேடுகிறார் அவரது அண்ணன். ஆனால் அண்ணனிடம் பல குறைகளை சொல்லி ஒவ்வொரு வரனையும் நிராகரித்து வருகிறார் தம்பி சிவக்குமார். கடைசியில் ஒரு வழியாக தான் முதன் முதலில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்ய சம்மதிக்கிறார் தம்பி சிவக்குமார். திருமண நிச்சயதார்த்தம் பாண்டிச்சேரியில் நடக்கிறது. அதற்காக சென்னையில் இருந்து பாண்டிக்கு காரில் செல்கிறார் நாயகன். போகும் வழியில் அவருக்கு என்னவெல்லாம் பிரச்சனை வருகிறது, கிளைமாக்சில் நடக்கும் டிவிஸ்ட் என்ன என்பது தான் படத்தின் முழுக் கதை. சிவக்குமார், காயத்ரி, ராம்ஸ், ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பயணத்தை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இயக்கியிருந்தால் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் இயக்குனரின்  முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள். இதனிடையை படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபல இயக்குனர் பேரரசு மற்றும் டேக் டைவர்ஷன் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து