முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து 5,000 கனஅடி தண்ணீர் திறப்பு

புதன்கிழமை, 25 மே 2022      தமிழகம்
Mettur-Dam 2022 05 10

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8539 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உயர்ந்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியது. நேற்று முன்தினம் காலை 117.76 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 10,508 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்தும், இருப்பும் திருப்திகரமாக இருந்ததால், சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக மே மாதத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விட்டார்.

அணையில் இருந்து முதலில் 8 கண் மதகு வழியாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 10 ஆயிரம் கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் 5,000 கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டது. இந்நிலையில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8539 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் நேற்று காலை 117.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.19 டிஎம்சியாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அருவிகளில் குளிக்கவும் காவிரியில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று காலை 9 மணி முதல் நீக்கப்பட்டதாக கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார். கடந்த 7 நாட்களுக்கு பின் மீண்டும் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து