முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலையின் "அரபி" திரைப்பட டீசர் வெளியானது

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2022      சினிமா
Annamalai-Arabi 07-06-2022

Source: provided

சென்னை : வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் உருவாகியுள்ளது அரபி என்ற திரைப்படம். இப்படம் தன்னுடைய 2 கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி உள்ளது. 

இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தமிழக பா.ஜ.க. தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

இந்நிலையில்  அரபி படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அண்ணாமலை சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளது அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலை தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து