முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் நடந்த விபத்தில் 10 பேர் பலி - 7 பேர் காயம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      இந்தியா
UP-Accident-2022-06-23

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹரித்வாரில் இருந்து 17 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன் நேற்று காலை விபத்துக்குள்ளானதில் 10 பலியாகினர், 7 பேர் காயமடைந்தனர். 

விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ஹரித்வாரில் இருந்து 17 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன் வியாழக்கிழமை காலை கஜ்ரௌலா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் இதுவரை அடையாளம் காணவில்லை எனவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!