முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது கார் குண்டு தாக்குதல்: 6 பேர் பலி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      உலகம்
Yemen-car-bomb 2022 06 30

ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து நடத்திய தாக்குதலில் வீரர்கள் உட்பட 6 பேர் பலியானார்கள். 

ஏமன் நாட்டின் தெற்கு பகுதி நகரமான ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் 4 பொதுமக்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. ஏடன் நகரில் அடிக்கடி அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதே போல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!