முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      தமிழகம்
Murmu 2022 06 30

Source: provided

சென்னை : ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் முன்னாள் கவர்னரும், ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவருமான திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். அதை தொடர்ந்து திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் முர்மு கடந்த வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா  வேட்பு மனு தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில், நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் மாநிலங்களவை செயலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா  நேற்று முன்தினம் சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். 

இந்நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார். அவர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சிகளான பா.ம.க. தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ.க.வினர் செய்துள்ளனர். முன்னதாக, புதுச்சேரிக்கு செல்லும் திரவுபதி முர்மு அங்குள்ள கூட்டணி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!