முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 3 வயது பாக். சிறுவனை குடும்பத்தாரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படையினர்

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      உலகம்
Pak 2022 07 02

Source: provided

பெரோஸ்பூர் : பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையை தவறுதலாக தாண்டிய மூன்று வயதான பாகிஸ்தான் சிறுவனை எல்லை பாதுகாப்பு படையினர் அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் எல்லை வேலிக்கு அருகில் நின்றபடி குழந்தை அழுது கொண்டிருந்ததை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கவனித்தனர். அதைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்பு படை களத் தளபதி பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் உடனடியாக பாகிஸ்தானுடன் கொடி சந்திப்பை நடத்த முன்றார்.

இதனால் குழந்தையைத் திருப்பி ஒப்படைக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் குழந்தை அவரது தந்தை முன்னிலையில் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!