முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவிலில் இன்று ஆனித்தேரோட்டம் : அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2022      ஆன்மிகம்
Nellaiappar-temple 2022-07-

Source: provided

நெல்லை : நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று  நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து உள்ளது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் 4 ரத வீதிகளிலும் வலம் வரும். தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள். இன்று அதிகாலை 4-30 மணிக்கு சுவாமி அம்மன் தேருக்கு எழுந்தருளளும், காலை 9 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது. 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 

தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் 4 ரத வீதிகளிலும் கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் உதவி போலீஸ் கமிஷனர்கள் விஜயகுமார், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து