முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் அடையாள அட்டை பெற 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2022      இந்தியா
tamilnadu-election-------2022-07-28

Source: provided

புதுடெல்லி: 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

முன்கூட்டியே... 

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க உரிமை இருக்கிறது. 18 வயதை அடைந்த பிறகுதான் அவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க முடிகிறது. வாக்களிக்கத் தகுதியான 18 வயது நிரம்பியவுடனே (ஜனவரி 1-ம் தேதிப்படி) வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். ஆனால், இனிமேல் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்றும் 18 வயது நிரம்பும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தலமை ஆணையர்...

மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களும் அதுசார்ந்த அதிகாரிகளும் இதுகுறித்து தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இணைந்து உத்தரவிட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து