முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேப்பர் ராக்கெட் விமர்சனம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2022      சினிமா
Paper-Rocket-Review 2022 07

Source: provided

பூர்ணிமா பாக்யராஜ் ஒரு மனநல மருத்துர். அப்பாவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனநெருக்கடியில் தவிக்கும் நாயகன் காளிதாஸ் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள். பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை நெஞ்சம் நெகிழ்வாக் சொல்லி இருக்கும் இணையத் தொடர்தான் இந்த பேப்பர் ராக்கெட். நாயகன் காளிதாஸ் ஜெயராமுக்கு நல்ல வேடம். அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார், தான்யா ரவிச்சந்திரன் அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ரேணுகாவின் கதாபாத்திரம் கொடுமையானது, கெளரி கிஷனின் சிக்கல் வேதனையானது நிர்மல் பாலாழியின் பாத்திரமும் ஏற்க முடியாத ஒன்று. கருணாகரன் கதாபாத்திரம் வித்தியாசமானது. அன்றாட வாழ்வின் எந்தச் சிக்கலும் இல்லாத அவருக்கு எல்லாமே சிக்கல்தான். தொடரின் ஆதாரமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் நாயகனின் அப்பா நாகிநீடு. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு அழகு. சைமன் கே கிங், தரன்குமார்,வேத்சங்கர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். சித்ஸ்ரீராமின் பாடல் நம்மை உருகவைக்கிறது. ரம்யாநம்பீசன் பாடல் ரசனை. எழுதி இயக்கி, மனித உணர்வுகளுக்குள் பயணப்பட்டு, எளிமையாக விளக்கி,  அன்பு பாசம் காதல் ஆகியனவற்றை நிறைத்து, நம்மைப் பல இடங்களில் அழவைத்து மனதுக்கு நெருக்கமாகியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து