முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோவிலில் இன்று தேரோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      ஆன்மிகம்
Andal-temple 2022 07-31

Source: provided

ஸ்ரீவில்லி : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடக்கிறது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடிப்பூர திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தேர் திருவிழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டுக்கான விழாவுக்கு விமரிசையாக ஏற்பாடுகள் நடந்து கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆடிப்பூர திருவிழாவை ஒட்டி சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆண்டாள் மடியில், ரெங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. 

இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 9.05 மணிக்கு தேர் திருவிழா தொடங்குகிறது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மான் ராஜ் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்கின்றனர். தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் மதியம் ஒரு  மணி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து