முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய்க்கால் குதிரை விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      சினிமா
Prabhu-Deva 2022-08-09

Source: provided

பிரபுதேவா நடிப்பில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் பொய்க்கால் குதிரை. இமான் இசை அமைத்துள்ளார், பாலு ஒளிப்பதிவு, ப்ரீத்தி மோகன் எடிட்டிங். கதை, ஒரு விபத்தில் தன் மனைவியை இழந்து ஒரு காலையும் பறிகொடுக்கிறார் நாயகன் பிரபுதேவா. மகள் தான் உலகம் என்று வாழ்ந்து வருகிறார். வந்த இன்சூரன்ஸ் பணத்தில் தனக்கு செயற்கை கால் பொறுத்துகிறார்.அதே நேரம் மகளுக்கு இருதய பிரச்சனையை குணப்படுத்த 70 லட்சம் தேவை படுகிறது. ஜெயிலில் உள்ள பிரகாஷ்ராஜை சந்திக்கிறார், அவரோ வரலக்ஷ்மி மகளை கடத்த சொல்லி ஐடியா தருகிறார். முதலில் மறுத்த பிரபுதேவா பின்னர் ஜெகனுடன் கூட்டணி போடுகிறார், எனினும் அவருக்கு முன் வேறு யாரோ பெண்ணை கடத்துகின்றனர். பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கிளைமாக்ஸ். இன்வெஸ்டிகேஷன், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என செல்கிறது இந்த படம். நல்ல கதை தேர்வு மட்டுமன்றி திரைக்கதை அமைப்பும் அருமைதான். முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும்,  இரண்டாம் பாதி வேகமெடுக்கிறது. பாடல்கள் சுமார் ரகமே. சண்டைக்காட்சிகள் சூப்பர், எமோஷன் சீன்கள் நன்று. ஆனாலும், நாம் எளிதில் யூகிக்க கூடிய ட்விஸ்டுகள் தான் வருகிறது. திரைக்கதையில் இன்னும் மெனெக்கெட்டு இருந்தால் குதிரை வேகம் எடுத்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து