முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் பலியான பிரபல கிரிக்கெட் நடுவர்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Rudy-Gortsen 2022-08-09

Source: provided

தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென். 1992-ல் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் முதல்முறையாக நடுவராகப் பணியாற்றினார். மூன்று வாரங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவராக அறிமுகமானார். அந்த டெஸ்டில் தான் முதல்முறையாக ரன் அவுட்டுக்கு 3-வது நடுவர் பயன்படுத்தப்பட்டார். 331 சர்வதேச ஆட்டங்களுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளார் ரூடி கோர்ட்ஸென். மெதுவாக இடது கையை உயர்த்தி பேட்டர்களுக்கு அவர் அவுட் கொடுக்கும் விதம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 18 வருடங்கள் நடுவராகப் பணியாற்றிய பிறகு 2010-ல் நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 

இந்நிலையில் 73 வயது ரூடி கோர்ட்ஸென், கார் விபத்தில் பலியாகியுள்ளார். கோல்ப் போட்டியில் பங்கேற்றுவிட்டு கேப் டவுனிலிருந்து காரில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அவர் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  ரூடி கோர்ட்ஸென் பலியானதாக அவருடைய மகன் தகவல் தெரிவித்துள்ளார். ரூடி கோர்ட்ஸெனின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

______________

நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக  மனோஜ் பிரபாகர் 

இந்திய அணிக்காக 1984 முதல் 1996 வரை 39 டெஸ்டுகள், 130 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மனோஜ் பிரபாகர். தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய அணிகளின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். 2008-ல் தில்லி அணி ரஞ்சி கோப்பையை வென்றபோது அந்த அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்தார். 2015-ல் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 

நேபாள அணியில் திறமையான வீரர்கள் உள்ளார்கள். நேபாளத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வமும் அதிகமாக உள்ளது. இதனால் நேபாள அணியினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார். 

___________

சர்வதேச டி-20 கிரிக்கெட்: பொலார்ட் புதிய சாதனை

டி20 கிரிக்கெட்டில் 600 ஆட்டங்களை விளையாடிய முதல் வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பொலார்ட் நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் போட்டியில் லண்டன் - மான்செஸ்டர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பங்கேற்ற 35 வயது பொலார்ட் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் (தி ஹண்ட்ரட் போட்டி, டி20 ஆட்டங்களாகவே கருத்தப்படுகிறது). லார்ட்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து அசத்தினார் பொலார்ட். 

600 டி20 ஆட்டங்களில் விளையாடிய பொலார்ட் ஒரு சதம், 56 அரை சதங்கள் உள்பட 11,723 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 309 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். டி20: அதிக ஆட்டங்கள் - பொலார்ட் - 600, பிராவோ - 543, சோயிப் மாலிக் - 472, கெய்ல் - 463.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து